1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 21 மார்ச் 2022 (14:28 IST)

நாகதோஷம் நிவர்த்தியாக சில எளிய பரிகாரங்கள் !!

ராகு, கேது, ஸ்தலங்களுக்கு சென்று முறையான பரிகாரங்களை செய்து வந்தால் நாக தோஷம் விலகி நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.


கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குளம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.

இரண்டு நாகங்கள் பின்னிக்கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாட்கள் விளக்கேற்றி வைத்து பூஜித்தால் நாகதோஷம் விலகும்.

கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலைநாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் பூஜித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.

ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஒரு தம்பதிக்கு உணவு அளித்து தாம்பூலம் தட்சணை கொடுத்து வலம் வந்து நமஸ்கரித்து வருவதால் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகி வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.