வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வற்றாத செல்வங்களை கொண்டுவந்து சேர்க்கும் நெல்லிக்காய் தீபம்...!!

வீட்டில் தீபம் ஏற்றுவது மகாலட்சுமியை அழைப்பதன் வெளிப்பாடு. வீட்டில் இருக்கும் இருளான எதிர்மறையை அக்னியின் வெளிச்சம் கொண்டு போக்குவதற்காகத்தான் விளக்கு அன்றாடம் காலை மாலை ஏற்ற வேண்டும்.
வீட்டில் இருக்கு எதிர்மறை மறைந்து நல்லவை நடக்கும். விசேஷ நாட்களில் எலுமிச்சை, அகல், மாவு தீபம் கூட நாம் ஏற்றுவதுண்டு. அது போலவே நெல்லிக்காய் விளக்கு ஏற்றுவதும் நன்மை என சொல்லப்படுகிறது.
 
நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் நம் துன்பங்கள் மறைந்து இழந்ததை மீண்டும் பெறலாம். விளக்கு ஏற்றுவது என்பது செல்வத்தை வாரி வழங்கும் மஹாலட்சுமி தாயின் உருவத்தை உணர்த்துவது. காலை, மாலை இரு நேரமும் விளக்கு ஏற்றப்படும்.
விளக்கு ஏற்றுவது என்பது அங்கு இறை சக்தியினை கொண்டு வருவதாக சொல்லப்படுகின்றது. அதிலும் நெல்லிக்காயில் நெய் விளக்கு ஏற்றுவது அவ்வளவு நல்லதாம்.
 
நெல்லிக்காய் விளக்கு தயார் செய்வது எப்படி?:
 
முதலில் காட்டு நெல்லிக்காயை வாங்கி மேற்புரமாக சற்று பள்ளமாக தோண்டி கொள்ளுங்கள். அதே போன்று கீழ்புறமும் சற்று தட்டையாக இருக்கும் அளவிற்கு வெட்டி எடுத்து விடுங்கள். பின்னர் பஞ்சு திரி கொண்டு நெய்யில் நனைந்து, பின்னர் அதனை நெல்லிக்காயில் வைத்து  விளக்கேற்றுங்கள். இவ்வாறு விசேஷ நாட்களில் இது போன்று விளக்கு ஏற்றுவதால் இழந்த செல்வங்களை மீட்டு தரும்.