வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

பசுவிற்கு அகத்திக் கீரை கொடுத்து வழிபாடு ஏன்?

பசுவிற்கு அகத்திக் கீரை, பழம் கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதற்குரிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு. பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.
மந்திரம்:
 
ஸர்வ காம துகே தேவி ஸர்வ தீர்த்தாபிசோசினிபாவனே ஸுரபி ஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே!
 
எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன் என்பது இதன் பொருள். இதைச் சொல்லி பசுவை வழிபட்டால், முன்னோர் சாபம், குடும்ப சாபம் தீரும். பிதுர் ஆசி பூரணமாக  கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் விரைவில் நடந்தேறும்.
 
முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும். நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.
 
பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.