1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

நவக்கிரகங்களின் பாதிப்புகளிலிருந்து விடுபட நவகிரக மூலிகைகள்...!

ஒவ்வொருவரின் ஜாதக் மகதிசை கோச்சார காலசக்கர புத்தி அந்தர சூட்சமங்கள் கெட்டு மனிதர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும் சமயம், அந்தந்த கிரகங்களுக்கு  உரிய மூலிகைகளைக் கொண்டு அந்த கிரகங்களுக்கு சாந்தி செய்து அந்த மூலிகையை கவசம் செய்து நம் உடம்பில் படும்படி உபயோகித்து பூஜித்து வர அந்த கிரகங்கள் திருப்தி அடைந்து மனிதர்களுக்கு கஷ்டங்களை தீர்த்து பரிபூரண நன்மைகள் அளிக்கிறது.
சித்தர்கள், ஞானிகள்,முனிவர்கள், மேதைகள், தவசிகள் யாவரும் தங்கள் அனுபவத்தில் பார்த்து இதற்கு பரிகாரமாக சில தெய்வீக மூலிகைகள், மனிதன் வளமாக  வாழ்வதற்கும், அந்த மூலிகைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் ஓலைச்சுவடிகளில் எழுதியுள்ளார்கள். அதை நம் முன்னோர்கள்,  அனுபவபூர்வமாக உணர்ந்து கிரக பாதிப்புகள், தோஷங்கள், செய்வினை கோளாறுகள் எதிரிகளால் வசப்பட்டு புத்தி பேதலித்த நிலையிலிருந்து விடுபட என்று நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு வாழ வழிகாட்டியுள்ளார்கள்.
 
அதன்படி நவக்கிரகங்களின் பாதிப்புகளிலிருந்து விடுபட அந்தந்த கிரகங்களை சாந்தி செய்து அதற்கு உண்டான மூலிகை ரட்சைகள் நம் தேகத்தில் தரித்து  பூஜித்து வர, அந்த கிரகங்கள் கண்டிப்பாக நம் மீது கருணை கொண்டு நமக்குத் தேவையான நன்மைகளை செய்வார்கள்.