1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்...!

நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க தினந்தோறும் இரவு சீக்கிரமாக தூங்கி அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள்ளாக துகிலெழுந்து, சிறிது நேரம் தியானம் செய்து உங்களின் விருப்ப தெய்வம், உங்களின் முன்னோர்கள் மற்றும் சித்தர்கள், முனிவர்களை மானாசீகமாக வணங்க வேண்டும். 
சூரிய பகவான் ஒரு மனிதனின் முழு உடல்நலத்திற்கும் காரகனாகிறார். அதிகாலையில் நீராடி காலையில்  உதிக்கின்ற சூரிய பகவானை அவருக்குரிய மந்திரங்களை கூறி வழிபட வேண்டும். புதன் கிழமைகளில்  தன்வந்திரி பகவானை வழிபட்டு வரவேண்டும்.
 
ஞாயிற்றுக்கிழமைகளில் அரசமரம் இருக்கும் கோவிலுக்கு காலை நேரத்தில் சென்று இறைவனை வழிபட்டு,  பின்பு அரசமரத்தை சுற்றிவருவது உங்களின் உடலில் ஏற்கனவே இருக்கும் பிணிகளை போக்கும். ஒரு  மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்தும் தன்மை சனி, ராகு-கேது கிரகங்களுக்கு அதிகம் உண்டு. 
 
சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சனி, ராகு-கேது கிரகங்களுக்கு நெய் தீபங்கள் மற்றும் பூஜைகள் செய்து  வழிபட்டு வந்தால் உடல் நலம் மேம்படும். தினமும் காலையில் உங்கள் வீட்டிற்கு அருகில் வாழும் நாய்கள், பூனைகள், காகங்கள் மற்றும் இதர பறவைகளுக்கு உணவளித்து வந்தால், அப்புண்ணிய செயலின் பலனாக  உங்களின் நீண்ட கால நோய்கள் நீங்கி, உடல்நலம் மேம்படும். எதிர்காலங்களில் கொடிய வியாதிகள் ஏற்படமாலும் தடுக்கும்.