1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கணபதி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்...!

கணபதியை வழிப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட அனைத்து விதமான செயல்கள் முறையே திருமணம், புது வீடு புகல், தொழில் முதலியவற்றில் தடையற்ற  வெற்றிகிட்டும்.
எந்த தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபது ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்மையை  பெறலாம்.
 
மஹாகணபதி ஹோமம் இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கும் விதமாக அமைகிறது. விக்ன விநாயகர் எல்லா தடையையும் நீக்கி  வெற்றியை தேடி தருபவர். இன்னல்களை களைபவர்.
 
எல்லா புது முயற்சிகளுக்கும், கல்விகேள்விகளில் சிறந்து விளங்கவும், திருமண முயற்சிகள் வெற்றியடையவும் விநாயக பெருமானை துதிப்பது நலம்.  யார்யாருக்கு கேது தசை நடக்கிறதோ, அவர்களும் மஹாகணபதி ஹோமம் செய்வது நல்லது. இந்த ஹோமத்தை வருடம் ஒரு முறை செய்தால் வாழ்வில் வளமும், நலமும் பெருகும். ஒவ்வொரு மாதமும் தங்கள் பிறந்த நக்ஷத்திரத்தில் கணபதி ஹோமம் செய்வதால் வாழ்வில் தடைகள்  அனைத்தும் நீங்கும்.