வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சகல தோஷங்களையும் நீக்க உதவுகிறதா உப்பு !!

சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை மகாலட்சுமியுடன் ஒப்பிடுவது வழக்கம். ஏனெனில் மகாலட்சுமி கடலில் தோன்றியவர். உப்பும் கடலில் தோன்றுகிறது என்பதால் உப்பு லட்சுமி கடாட்சம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது.

நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு ஜீவாத்மாவைப் போன்றது. கடலில் நீராடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கை.
 
துர்சக்தி மற்றும் கெட்ட அதிர்வுகளை உப்பு விரட்டும் ஆற்றல் கொண்டுள்ளதால், இன்றும் திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுகிறது.
 
வெள்ளிக்கிழமை வாங்கும் உப்பு செல்வத்தை குவிக்கும் என்பார்கள். வெள்ளிக்கிழமையன்று உப்பு வாங்கினால் பணம், சொத்துக்கள் உள்ளிட்ட செல்வங்கள் சேரும் என்ற நம்பிக்கை இந்து மதத்தில் இருக்கிறது.
 
புதுமனை புகுவிழாவில் முதலில் புதுவீட்டிற்குள் உப்பைத்தான் எடுத்துச் செல்வார்கள். வீட்டில் எல்லா செல்வங்களும் நிலைத்து நிற்க வேண்டி உப்புக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது.
 
குளிக்கும்போது நீரில் உப்பை கலந்து குளித்தால் உங்களை சுற்றியிருக்கும் கெட்ட சக்திகள் விலகிப்போவதை உங்களால் உணர முடியும்.