வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த மலர்கள் எவை தெரியுமா...!

விநாயகருக்கு, முக்கியமாக அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். பூக்களில் செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய பூக்கள் மட்டுமே  பயன்படுத்தப்படுகிறது. விநாயகருக்கு சிவப்பு நிற செம்பருத்தி என்றால் ரொம்ப பிடிக்கும். 
விநாயகருக்கு அருகம்புல் மிகவும் பிடிக்கும் என்று தெரியும். மேலும் எந்த ஒரு பூஜையின் போதும், இந்த அருகம்புல் இல்லாமல் பூஜை நடந்ததில்லை. எருக்கம் பூ விநாயகருக்கு பிடித்த மற்றொரு பூ. மாதுளையின் இலைகள் இந்தியாவின் சில பகுதிகளில் மாதுளையின் இலைகள் மற்றும் பூக்களைக் கொண்டு  பூஜைகள் செய்வார்கள். 
 
விநாயகர் சதுர்த்தியன்று சில இடங்களில் இந்த பூ மற்றும் இலைகளைக் கொண்டு பூஜைகளை மேற்கொள்வார்கள். துளசி துளசி என்று சொல்லும் போது அனைவருக்கும் கடவுள் பெருமாள் தான் ஞாபம் வருவார். ஆனால் இந்த துளசியும் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். எனவே இந்த விநாயகர் சதுர்த்திக்கு துளசி அலங்காரம் மேற்கொண்டு, நன்மையைப் பெறுங்கள். விநாயகருக்கு மருக்கொழுந்து, பவள மல்லி பூக்கள், மலர் சங்குப்பூ என்றாலும் மிகவும் இஷ்டம். பொதுவாக சங்குப்பூவில் வெள்ளை மற்றும் நீலம் என இரண்டு உள்ளது. இவை இரண்டுமே விநாயகருக்கு உகந்த பூக்களாகும்.