வியாழன், 14 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கோவிலில் உள்ள தலவிருட்சத்தை சுற்றுவதால் என்னென்ன பலன்கள் உண்டு தெரியுமா.....?

நமது முன்னோர்கள் ஒவ்வொரு கோவிலுக்குகென்று ஒரு தல விருட்சத்தை வைத்து வழிபட்டனர். அது புளியமரம், அரசமரம், வேம்பு, வன்னி, பாரிஜாதம், பனை போன்ரவையாக இருந்தது. அந்த தலவிருட்ச மரத்தினை அந்த ஊர் பகுதிகளில் வெட்டக்கூடாதென்பது எழுதப்படாத  விதியாகவும் இருந்தது.
தலவிருட்சத்தை சுற்றினால் என்னென்ன பலன் கிடைக்கும்:
 
அரச மரத்தை சுற்றினால் - பிள்ளை வரம் கிடைக்கும்.
 
வேப்ப மரத்தை சுற்றினால் - கர்மவினைகள் தீரும்.
 
மாமரத்தை சுற்றினால் - மங்கள செய்தி வரும்.
 
விடதாழை மரம் - சனி தோஷம் போக்கும்.
 
பின்னை மரம் - திருமண தடைகளை நீக்கும்.
 
ஸம்தானாக மரம் - பிள்ளைகளின் தீய பழக்கங்களை நீக்கும்.
 
பாரிஜாத மரம் - உடலில் தீராத நோய்களை தீர்க்கும்.
 
பும்ஷிக மரம் - புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.
 
அரிசந்தன மரம் - ஏவல், பில்லி, சூன்யங்களை போக்கும்.
 
குறுந்த மரம் - வீடு, வாகன சேர்க்கை உண்டாகும்.
 
கொன்றை மரம் - துஷ்ட சக்திகளை விரட்டும்.
 
ஞான மரம் - அறிவு, கல்வி, நல்ல ஞானத்தை தரும்.
 
கருநெல்லி - மகாலட்சுமியின் அருள் பார்வை உண்டாகும்.
 
நத்தைச்சூரி - நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்.
 
கல்லால மரம் - உலகத்திலுள்ள செல்வங்களை ஈர்த்து தரும்.
 
குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு, நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.