ஒவ்வொரு ராசியினருக்கும் உரிய சிவாலயங்கள் எது தெரியுமா...?

மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடவேண்டும். எந்த ராசியினருக்கு எங்கு சென்று வழிபட்டால் சிவனின் முழு அருளைப் பெறலாம் என்பதைக் காண் போம்: 
மேஷம்: மலைமேல் அமர்ந்த சிவனை வழிபடுவது நல்லது குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம்.
 
ரிஷபம்: திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம்.
 
மிதுனம்: திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வரலாம். சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்  பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.
 
கடகம்: திருக்கடையூர், திருவானைக்காவல், வேலுர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். 
 
சிம்மம்: சிதம்பரம், திருவண்ணாமலை சென்று வழிபடலாம்.
 
கன்னி: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடலாம்.
 
துலாம்: சிதம்பரம், காளஹஸ்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவில் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும்.
 
விருச்சிகம்: திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது.
 
மகரம்: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
 
கும்பம்: சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்டால், உற்சாகம் தரும் செய்திகள் உங்களை வந்தடையும்.
 
மீனம்: வேதாரண்யம், ஜலகண்டேஸ்வரர் கோவில், திருவானைக்காவல் சென்று வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம்.


இதில் மேலும் படிக்கவும் :