புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ஆண்டு ஜாதகம்
Written By

தமிழ் வருட பிறப்பு - 2019 விகாரி வருஷ பலன்கள்

இறைவனின் பரம சைதன்யமான கிருபையாலும் விகாரி வருஷம் 14 ஏப்ரல் 2019 அன்றைய தினம் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவம், நல்ல மழை பொழியவும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நல்ல ஆரோக்கியம் ஏற்படவும் நாம் இறைவனை  வணங்குவோம். இந்த தமிழ் புத்தாண்டு ஆதிசேஷன் நக்ஷத்ரமான ஆயில்ய நக்ஷத்ரத்தில் பிறக்கிறது.
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் உத்தராயணம் வருஷ ரிது சித்திரை மாதம் 01ம் தேதி இதற்குச் சரியான ஆங்கிலம் 14  ஏப்ரல் 2017 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சுக்லபக்ஷ தசமியும் ஆயில்ய நக்ஷத்ரமும் சூல நாமயோகமும் தைதுல கரணமும்  சித்தயோகமும் கொண்ட சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 17.50க்கு (உதயாதி மணி: 1.15க்கு) கடக லக்னத்தில் தமிழ் புத்தாண்டு  பிறக்கிறது.
 
நன்மை அடையும் ராசிகள்: மேஷம் - மிதுனம் - கடகம் - சிம்மம் - கன்னி - துலாம் - தனுசு - மகரம்
பரிகாரத்தின் மூலம் நன்மை அடையும் ராசிகள்: ரிஷபம் - விருச்சிகம் - கும்பம் - மீனம்
திசா இருப்பு புதன் திசை 08 வருஷம் 17 மாதம் 19 நாட்கள். 
கிரக பாதசாரம்: லக்னம் - பூசம் 3ம் பாதம் - சனி சாரம்
சூரியன் - அஸ்வினி - 1ம் பாதம் - கேது சாரம்
சந்திரன் - ஆயில்யம் - 2ம் பாதம் - புதன் சாரம்
செவ்வாய் - ரோகினி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
புதன் - உத்திரட்டாதி 2ம் பாதம் - சனி சாரம்
குரு - மூலம் - 1ம் பாதம் - கேது சாரம்
சுக்கிரன் - பூரட்டாதி - 3ம் பாதம் - குரு சாரம்
சனி - பூராடம் - 3ம் பாதம் - சுக்கிரன் சாரம்
ராகு - புனர்பூசம் - 3ம் பாதம் - குரு சாரம்
கேது - உத்திராடம் - 1ம் பாதம் - சூரியன் சாரம் 
 
புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவகிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் இறை நம்பிக்கையும் - விடா  முயற்சியும் - தன்னம்பிக்கையும் கொண்டு அனைத்தையும் வழியில் அமைந்திருக்கிறது எனலாம். தமிழ் புத்தாண்டு சர லக்னமான கடக  லக்னத்தில் பிறக்கிறது. லக்னாதிபதி சந்திரன் ஆட்சி சஞ்சாரம் பெற்றிருக்கிறார். கடக ராசி ஆயில்ய நக்ஷத்ரத்தில் ஆண்டு பிறக்கிறது.   ஆண்டின் தொடக்கத்தில் பஞ்சம தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் வலுவாக லாபஸ்தானத்தில் இருக்கிறார். கிரகங்கள் அனைத்தும் நல்ல  நிலையில் இருக்கிறது. 
 
விகாரி வருஷ வெண்பா:
 
பார விகாரிதனிங் பாரண நீருங் குறையும்
மாரியில்லை வேளாண்மை மத்திபமாம் - சேரார்
பயம் அதிகமுண்டாம் பழையோர்கள் சம்பாத்
தியவுடைமை விற்றுண்பார் தேர்.
 
பொது பலன்கள்:
 
விகாரி வருஷத்தில் மழை அதிகமாக பெய்யும். பொருட்கள் விலை ஏற்றத்துடன் இருக்கும். புஷ்பங்கள் அதிகமாக விளையும். உலக நாடுகளில்  போர்கள் மறையும். நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் நேர்மையாக இருப்பார்கள். தீ விபத்துக்கள் அதிகரிக்கும். இந்த ஆண்டு ஆதிசேஷனுக்கும்  பெருமாளுக்கும் உகந்த நக்ஷத்ரமான ஆயில்ய நக்ஷத்ரத்தில் பிறக்கிறது. மண்ணில் வாழும் மக்களுக்கு எல்லாம் பொன்னும் பொருளும்  போகமும் செல்வாக்கும் சொல்வாகும் இன்னும் பெருகும். 
 
கன்னியர்களின் கவலைகள் தீரவும் - காளையர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைத்திடவும் - எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறவும் லாப ஸ்தானத்தில் இருக்கும் லக்னாதிபதி சந்திரன் புதன் சாரம் பெற்றிருப்பதால் அதன் அதிதேவதையான ஸ்ரீமன் நாராயணனை வணங்கி வர அனைத்தும் நிறைவேறும். ஆண்டின் தொடக்கத்தில் தனாதிபதி சூரியன் நாடிப்படி குரு - சனி - கேதுவுடன் சம்பந்தம் பெறுகிறார்கள். ஆண்டின் தொடக்கத்திலேயே சுபகாரகன் குரு லக்னத்திற்கு ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் நிகழ்வானது 12 ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் அறிய நிகழ்வாகும். எனவே இவ்வாண்டு சுபகாரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடப்பதைக் காட்டுகிறது. அல்லல்கள் அனைத்தும் தீரப் போகிறது. தனது பார்வையால் குரு செவ்வாயை பார்ப்பதால் குருமங்கள யோகத்தைக் காட்டுகிறது. மங்கள காரியங்கள் அனைத்தும் எந்த விதமான தங்கு தடையின்றி நடைபெறும். பூமியிலுள்ள மக்களுக்கெல்லாம் தைரியமும் - இறைவனின் பரம சைதன்யமும் நிறையப் போகிறது. கவலைகள் மறைந்து கை நிறைய  தனலாபம் அமையப் போகிறது. 
 
கிரக மாற்றங்கள்: 28 அக்டோபர் 2019 - அன்று விருச்சிக ராசியில் இருக்கும் குரு பகவான் தனுசு ராசிக்கு மாறுகிறார்.