ஆஞ்சநேயரை பல விதமான முறைகளில் வழிபாடு செய்வதால் நினைத்தது நினைத்த நேரத்தில் நடைபெறும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.
ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ராமநாத வழிபாடு ஆகும். இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிக நல்ல பலன்களை தரும்.
புராணக் கதைகளின்படி சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயமாம். அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் சற்று குறையும் எனவும் நம்பப்படுகிறது.
முழுமையான பக்தியோடு ஒருவர் ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், ஆஞ்சநேயரின் இறைத்தன்மையுள்ள பாதுகாப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.