1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வீட்டில் ஏற்படும் பணப்பிரச்சினை தீர்க்கும் வழிகள் என்ன தெரியுமா...?

கை நிறைய சம்பாதித்து பணத்தினை ஒரு பக்கம் சேமித்து வைத்தாலும், மறுபக்கம் ஆன்மீக வழிகளையும் கொஞ்சம் பின்பற்றினால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த விஷயங்களைத்தான்.

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லட்சுமி கடாட்சம் ஏற்படும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு  நீங்கும்.
 
வியாழக்கிழமை விரதமிருந்து குபேரனை வழிபட பணப்பிரச்சினை படிப்படியாக தீர்ந்து பணம் வர ஆரம்பிக்கும்.
 
வீட்டில் பலவித ஊறுகாய் வைத்திருக்கவும். ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பலவித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
 
நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள், குங்குமம் தரவும் இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பணவரவு  ஏற்படும்.
 
அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் பேடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களை வழிபட பணம் வரும்.
 
பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும். வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.