1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அதிர்ஷ்டத்தை தரக்கூடிய கருமஞ்சளை பற்றி தெரியுமா....?

தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சள் அற்புத பலனைப் பற்றி தெரிந்துக்கொள்வோம். மஞ்சள் வகைகளிலே அபூர்வமாக கிடைக்ககூடிய ஒன்று. 

ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருமஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும்.
 
பல அறிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது கருமஞ்சள். தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சளில் காளியும், பைரவரும் வசிக்கிறார்கள் என்று சாஸ்திரங்கள் உரைக்கின்றன. 
 
இந்த கரு மஞ்சளை சிவப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்திருந்தால் நாம் செய்யும் செயல்களில் எல்லாம் எதிர்பாராத வெற்றிகளை கொடுக்கும், வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றங்களை கொடுக்கும், எதிர்பாராத தன வரவுகளையும் பொருள் வரவுகளையும் உண்டாக்கும்.
 
இதுவரை வெளியில் கொடுத்து திரும்பி வராத பணம் திடீரென எதிர்பாராமல் நல்லபடியாக வந்து சேரும், அற்புதமான முன்னேற்றத்தையும் பண வரவுகளையும் தருவதால் வியாபாரிகள் கட்டாயம் அணியவேண்டியது கருமஞ்சள் ஆகும். 
 
வாழ்வில் எதிர்பாராத வெற்றிகளை கருமஞ்சள் பெற்றுத்தரும். ஆகையால் வாழ்வில் வெற்றியையும் முன்னேற்றத்தையும் விரும்பும் அனைவரும் கருமஞ்சள்  அணியலாம்.