ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டும் வெண் கடுகு...!!

வீட்டில் புகுந்து கொள்ளும் தீய சக்திகளை விலக்குவது கடினம் அல்ல. ஆனால் வீட்டில் அமைதியின்மைக்குக் காரணமே தீய சக்திகள்தான் என்பது மட்டும் சத்தியமான உண்மை.
 
வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபத்தைப் போட வேண்டும். அதில் சிறிதளவு  வெள்ளைக் கடுகை போட்டு, வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட்டு வந்து ஸ்வாமி அறையில்  வைத்து விட வேண்டும். அதன் பின் நடப்பதைப் பாருங்கள்.
 
வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவகணம் ஆகும். நம் வீட்டில் உள்ள கெட்ட  சக்திகளை விரட்டும் சக்தி கொண்டது. இதனை சாம்பிராணி பொருட்களுடன் சேர்த்து சாப்பிராணி போடலாம். 
 
வெண்கடுகை வீட்டில் அனைத்து இடங்களிலும் தூவி 24 மணி நேரம் அப்படியே வீட்டை பெருக்காமல் வைத்திருந்து, பிறகு அவற்றை  பெருக்கி எடுத்து ஒரு துணியில் முடிந்து அதனை மூன்று வழி கூடும் இடத்தில் அதை போட்டு விடலாம். பிறகு வீட்டை தண்ணீரில் விபூதி  கலந்து அனைத்து இடங்களிலும் தெளித்துவிடலாம். இதனால் வியாபார எதிரிகள் மற்றும் அனைத்து எதிரிகளும் விலகுவார்கள்.
 
பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர் ஆவார். ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய  சக்திகள் இருக்க முடியாது. அவை தீய மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும்.