வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2024 (09:09 IST)

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | December 2024 Monthly Horoscope| Kanni | Pisces

Kanni
December 2024 Monthly Horoscope : இந்த 2024ம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதம் பல்வேறு வழிகளில் நன்மைகளை தரும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.


 
கிரகநிலை:
ராசியில் ராகு  - தைரிய வீரிய  ஸ்தானத்தில் குரு(வ)  - பஞசம  ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர  ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக  ஸ்தானத்தில் சனி என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:
03-12-2024 அன்று சுக்கிரன்  தொழில்  ஸ்தானத்தில் இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
15-12-2024 அன்று சூர்யன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-12-2024 அன்று சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
காரியமே கண்ணாக இருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம்  எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியின் விளிம்பில் சென்று முழு வெற்றியடையாமல் இருந்து வந்த நிலை மாறும். உடல் நிலை சீரான நிலையில் இருக்கும். சிலருக்கு கண் கோளாறுகள் இருந்தால் அது நீங்கும். பேச்சை பாதியாக குறைப்பது நல்லது. நீங்கள் சொல்லாததை எல்லாம் சொன்னதாக சொல்லி வம்பிழுக்கும் மனிதர்கள் உங்களை சூழ்ந்து இருக்கலாம்.

உத்யோகஸ்தர்களுக்கு வாகனம், இயந்திரங்கள் பயன்படுத்தும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தினில் நல்ல மதிப்பு கிடைக்கும். உங்களுக்கு பணி இட மாறுதல், பணி உயர்வு கிடைக்கும். பணம், நகை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.

தொழில் செய்பவர்கள் யாருக்கும் கடன் கொடுக்கும் முன் எச்சரிக்கை தேவை. நன்கு விசாரித்து எதையும் செய்யவும். எங்கும் பயணம் செய்யும் முன் மிகுந்த முன்னேற்பாடுடன் செல்லவும்.

குடும்பத்தில் பேசுவதற்கு முன் நன்கு யோசித்து பேசுங்கள். பண விஷயங்களில் மிகவும் கறாராக இருக்கவும். தேவையற்ற வீண் ஆடம்பர செலவுகளை குறையுங்கள். தைரியம் பிரகாசிக்கும் காலமிது. ஆனாலும் அசட்டுத்தைரியம் வேண்டாமே. தாயார் தாய்வழி உறவினர்களுடன் உறவுகள் மேலோங்கும். வீடு, மனை, வாகனம், ஆபரணங்கள் யோகம் கூடி வரும் காலமிது.

கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும்.

அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள்.

பெண்களுக்கு பிள்ளைகள் படிப்பில் கவனம் தேவை. பிள்ளைகளுடன் தேவையற்ற வீண் வாதங்களில் ஈடுபடாதீர்கள். உடல்நிலையில் சீரான நிலை இருந்தாலும் கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் மிகுந்த எச்சரிக்கை தேவை.

மாணவ மணிகள் படிப்பில் சாதனைகள் புரியலாம், ஆனால் சோம்பல் கூடவே கூடாது. எதிர்காலத்திற்கு தேவையான முதலீடுகளை வீட்டிலுள்ளவர்களிடம் ஆலோசித்து செய்யவும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்கள் நடத்துவது பற்றிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அளிக்கும். சிக்கன நடவடிக்கை மேற்கொள்வீர்கள்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் உங்கள் தொழிலில் உங்களுக்கென தனி முத்திரையை பதிப்பீர்கள். சிலருக்கு வாக்கு கொடுக்க வேண்டி நிர்ப்பந்தம் ஏற்படும். மிக அருமையாக உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

ரேவதி:
இந்த மாதம் பெரியோர்களின் ஆசி உண்டாகும். ஆடை, அணிகலன் புதிதாக வாங்குவீர்கள். சிலரின் பொறாமைக்கு ஆளாவீர்கள். உன்னத நிலைக்கு செல்ல வேண்டி மனம் ஏங்கும்.

பரிகாரம்: சிவனை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26, 27