1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2024 (09:01 IST)

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மகரம்! | December 2024 Monthly Horoscope| Magaram | Capricorn

Magaram
December 2024 Monthly Horoscope : இந்த 2024ம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதம் பல்வேறு வழிகளில் நன்மைகளை தரும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.


 
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய  ஸ்தானத்தில் ராகு - பஞசம  ஸ்தானத்தில் குரு(வ)  - களத்திர  ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சந்திரன் - அயன சயன போக  ஸ்தானத்தில் சுக்கிரன் என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:
03-12-2024 அன்று சுக்கிரன்  அயன சயன போக  ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.  
15-12-2024 அன்று சூர்யன் லாப  ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-12-2024 அன்று சுக்கிரன் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
கொடுத்த வேலையை சிரமேற்க்கொண்டு செய்யும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம்  நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டும். தங்கள் உடல்நிலை சிறப்பான முன்னேற்றம் அடையும். இருந்தாலும் அவ்வப்போது சிற்சில அசௌகரியங்கள் வந்து போகலாம். தூக்கத்திற்கு ஆசைப்படாமல் உழைத்தீர்களென்றால் வெற்றி நிச்சயம். உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள்.

தொழில் செய்பவர்கள் லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.

குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக்க் கேட்டு நடப்பர். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்படவும். தைரியத்தை இழக்காதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை. தாயார், தாய் வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள்.

கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது.

பெண்களுக்கு குழந்தைகள் நலன் சிறக்கும். பிள்ளைகள் நன்றாக படிப்பர். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்த்து சரியாகும். கணவன் - மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை.

மாணவமணிகள் மிகுந்த எச்சரிகையுடன் படிக்க வேண்டும். படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம்.

திருவோணம்:
இந்த மாதம் வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை.

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும்.

பரிகாரம்: வில்வ இலையைப் பறித்து சிவனுக்கு அர்ச்சனைக்குக் கொடுக்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21, 22