1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பைரவர் வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்...!!

சிலருக்கு தனது வீட்டிலே பல பிரச்சனைகள் நடைபெறும். இதற்கு காரணம் வீட்டின் வாஸ்து சரியில்லாமையே ஆகும்.

வீடு கட்டும்போது வாஸ்து பார்க்காமல் கட்டியது. இடுகாட்டிற்கு அருகில் இருப்பது, மேலும் அவர்களின் வீட்டு சந்தோஷம்மில்லாமை, எந்த காரியம் தொடங்கினாலும் அது சரியாக அமையாமை, எதற்கெடுத்தாலும் தடங்கள் போன்ற நிகழ்வுகள் நடைபெறுமாயின் அவற்றை அதவாது வாஸ்து தோஷம் நீங்க பைரவருக்கு விளக்கு போட வேண்டும். 
 
வீட்டின் நான்கு மூலைகளிலும் விளக்கு ஏற்றி பைரவர் கவசம், பைரவர் காயத்ரி, பைரவர் ஸ்லோகம், ஸ்துதி மற்றும் பைரவர் போற்றி  போன்றவற்றை சொல்ல வேண்டும். இதனை 90 நாட்களுக்கு செய்யலாம் இல்லையெனில் தோஷம் விலகும் வரை செய்யலாம். 
 
இதனை செய்வதற்கு முன் பைரவர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு விளக்கு ஏற்றி விட்டு பின்னர் பைரவருக்கும் விளக்கு ஏற்றி அவரிடம்  அனுமதி வாங்குவது போல் பின்னர் வீட்டிற்கு வந்து விளக்கினை ஏற்றி வழிபடலாம். இதனால் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். இவ்வழிபாட்டினை தேய்பிறை அஷ்டமி, பௌர்ணமி நாட்களில் ஆரம்பிக்கலாம்.