1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து பூஜிப்பதால் உண்டாகும் பலன்கள் !!

வீட்டில் வைத்தும் ஸ்படிக லிங்கத்தை பூஜிக்கலாம். அவ்வாறு பூஜை செய்பவர்கள் லிங்கத்திற்கு பாலாலும் பழச்சாறுகளாலும் தூய நன்னீராலும் அபிஷேகம் செய்து,  பூக்களால் பூஜித்து தூப தீபம் காட்டி வழிபட சகல பாவங்களும் நீங்கும். வீட்டில் ஐஸ்வர்யமும் சந்தோஷமும் பெருகும். 

ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது லட்சுமி கடாட்சம் வரும். 
 
ஸ்படிக லிங்கத்துக்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். முன்பு சொன்னது போல இதன் நேர்மறையான அதிர்வுகள் நவகிரகங்களின்  கெட்ட பலனை பெரிதும் அழிக்கும். ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா  பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும். 
 
நாம் சொல்லும் மந்திரங்களுக்கு முழுமையான பலன் கிட்ட வேண்டுமானால் அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து பய பக்தியுடன் ஜபித்தால் பலன்  பல மடங்கு கிட்டும் என்பது ஐதீகம். .

நாம் என்ன எண்ணத்துடன் அந்த லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும். 
 
மேலும் ஸ்படிக லிங்கத்தின் முன் சிவனை மட்டும்தான் வழிபட வேண்டும் என்றில்லை. எடுத்துக்காட்டாக லட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி அஷ்டோத்திர  மந்திரம் சொல்வோர், அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து சொன்னால் பலன் பல மடங்கு பெருகும். 
 
ஸ்படிக லிங்கத்தின் மற்றொரு பெரும் சிறப்பு என்னவென்றால். அபிசார தோஷம் அதாவது, ஏவல் பில்லி சூனியங்களால் பிரச்சினை உள்ளவர்கள், ஸ்படிக லிங்கத்தின் முன் மனமுருகி தினமும் அரை மணி நேரம் என தொடர்ந்து இருபத்தொரு நாட்கள் அமர்ந்தால் எல்லா தோஷங்களிலிருந்தும் விடுபடலாம் என்பது  நம்பிக்கை.