திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எந்த சனி தோஷமாக இருந்தாலும் போக்கும் எளிய பரிகாரங்கள் !!

திருநள்ளாறு, திருக்கொள்ளிகாடு, குச்சனூர் ஏரிக்குப்பம் சென்று சனீஸ்வரபகவானை வணங்கி வந்தால் நம் மனக்கவலைகள் மற்றும் கெடுபலன்கள் நீங்கி விடும்.

தினசரி வீட்டில் குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம். வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபாடு செய்யவேண்டும்.

தினசரி சனீஸ்வரபகவானின்  வாகனமான காக்கைக்கு உணவளிக்கவும். மகாவிஷ்ணுவின் அம்சமான வலம்புரி சங்கு, சாளக்கிராமத்தை வழிபடவும்.
 
துளசிமாலை, வன்னி மணிமாலை, ருத்ராட்சம் அணிந்திருப்பவர்களுக்கு சனீஸ்வர பகவானின் தாக்கம் பாதிப்பதில்லை. அடிக்கடி பெருமாள் கோவிலுக்கு சென்று  சடாரி வைத்துக் கொள்வதால் சனீஸ்வரபகவானின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
 
சனீஸ்வரபகவானின் கெடுபலன் ஏற்படாமல் தப்பிக்க நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். கஷ்டப்பட்டு வெயிலில் பணிபுரியும் உழைப்பாளிகளுக்கு காலணி தானம் செய்யலாம். 
 
வஞ்சக எண்ணம், பொறாமை, அடுத்தவர்களின் முன்னேற்றத்தை கெடுக்கும். பழிவாங்கும் எண்ணத்தை முற்றிலும் கைவிட வேண்டும். கெட்ட வார்த்தைகள்,  அமங்கல சொற்களை பேசுதல், காமஉணர்வை தூண்டக்கூடிய படங்களை பார்த்தல் கூடாது.
 
சனீஸ்வரபகவானின் குருவான காலத்தை நிர்ணயம் செய்யும் ஸ்ரீகாலபைரவரை வணங்கி வந்தால் துன்பங்கள் குறைந்து இன்பங்கள் அதிகரிக்கும்.