வரம் தரும் வாராகி அம்மனின் வழிபாட்டு பலன்கள் !!

Sasikala|
நமக்கு எப்போதெல்லாம் துன்பம் அல்லது நம்முடைய வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு சென்று போக முடியாத சூழல் ஏற்படும்போது நாம் இந்த வாராஹி வழிபாடு செய்வதன் மூலமாக அம்மன் நம்முடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுவாள்.

ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும்.
 
வராகி அம்மனுக்கு எதிர்நோக்க சக்தி அதிகமாக இருக்கும். எனவே எல்லாவற்றையும் முன்னோக்கிப் பார்த்து நமது கஷ்டங்களை போக்குவார். அதுமட்டுமல்லாமல் இவர் சொல்லும் அனைத்து சொற்களில் சக்திகள் மிக அதிகம். எனவே இவர் ஒரு வாக்கை நமக்கு அளித்து விட்டார் என்றால் அது நிச்சயம் நடந்துவிடும். எனவே  இவரின் வார்த்தையை ஆழ்ந்த வழிபாடு மூலமாக நாம் பெற முடியும்.
 
ஆதி பராசக்தி வடிவங்களில் உயர்ந்த வடிவம். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி. வாராகி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவி யாகவும் விளங்குகிறாள்.
 
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், தபோலோகம் உள்ளிட்ட ஏழு லோகங்களின் காவல் படைத்தலைவி, தன்னை நம்பிய பக்தர்களுக்கு துளிகூட தீவினை அண்டாது காப்பதில் மூங்கில் போன்ற திடமான உடலை கொண்ட வெற்றி தேவதை அவள். எட்டு திசை அதிபர்களின் ஆயுதங்களில் உறைந்திருப்பவள் இந்த  வாராகி.


இதில் மேலும் படிக்கவும் :