வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

இன்றைய நாளில் துர்கையை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !!

இன்று நந்த நவமி விரதமிருந்து துர்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து நந்த தேவியின் அருள் பெற்று வேண்டிய வரங்களைப் பெறுவோம்.

இன்று நந்த நவமி. துர்கை தேவியின் அவதாரங்களுள் ஒருத்தியாகக் கருதப்படும் நந்த தேவியை வழிபடுவதற்கு உகந்த நாள். அழகையும் ஆற்றலையும் வரமாக அளிக்கும் வல்லமை வாய்ந்தவள்.
 
பொதுவாக அஷ்டமி தினம் தான் துர்கையை வழிபடுவதற்கு உகந்த நாள். ஆனால், விதிவிலக்காகப் புரட்டாசி மாத வளர்பிறையில் வரும் நவமி தினம் துர்கையின் அவதாரமான நந்த தேவியை வழிபடுவதற்குச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.
 
யோகிகளும் சாதுக்களும் நந்த தேவியை இன்று தான் வழிபட்டு வேண்டிய வரங்களைப் பெறுகிறார்கள். இன்று துர்கை தேவியை வழிபடும் போது மற்ற தினங்களில் கிடைக்கும் பலன்களை விடவும் ஆயிரம் மடங்கு அதிக பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
இன்றைய நாளில் துர்கையை வழிபட்டால் நவதுர்கைகளை வழிபட்ட பேறு கிடைக்கும். சிவபுராணத்தின்படி நந்த தேவி இமயமலை யின் உயர்ந்த சிகரத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.
 
இமயமலையில் இருக்கும் உயரமான சிகரம் ஒன்றுக்கு 'நந்த தேவி' என்று பெயர். இன்று துர்கையை வழிபட்டால் வெற்றி, செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றை அருளுவாள். இன்றைய நாள் தவறவிடக்கூடாத நாள். இன்று, விரதமிருந்து துர்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்யலாம்.