1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பிரம்ம முகூர்த்ததில் இறை வழிபாடு பெற்று தரும் பலன்கள்...!!

சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம்.

சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம்  ஆரம்பமாகின்றது.
 
பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது. சிவபெருமானின் பெருங்கருணையினால் தான் படைத்தற் தொழிலைப் புரியும்  நான்முகன் (பிரம்மன்) தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.
 
பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்வது மேலும் பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் செய்வது போன்ற சுப காரியங்கள் நடைபெற்றால் அங்கு சுபத்தன்மை ஏற்படும். அவ்விடம் எவ்வித அமங்களமும் ஏற்படாது. மங்களம் குடிகொள்ளும். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுவதாக  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.
 
காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே (மரணத்திற்கு ஒத்திகை போன்றது) சற்றேறக்குறைய மறுபிறவிதானே!
 
எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலை சிவபெருமானின் பெருங்கருணையால்  செய்பவர் பிரம்மா.
 
நாம் தொடங்கும் செயல்கள் எல்லாம் வெற்றியாகத்தான் இருக்கும். பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.