1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சாம்பிராணி தூபத்தில் இதை கலந்து போடுவதால் என்ன பலன்கள் தெரியுமா?

பெண்கள் தங்கள் கைகளை அழகு படுத்த பயன்படும் பொருளில் ஒன்று தான் மருதாணி. இது அழகுபடுத்த மட்டுமல்லாமல் நாம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அகற்றும் தன்மை கொண்டது.

ஏனென்றால் மருதாணி திருமகளுக்குரியது. ஆகவே இதில் இருக்கும் விதையை பறித்து தூபம் போடுவதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. வீட்டில் மருதாணி செடி இருந்தாலே அந்த வீட்டில் கெட்ட சக்திகள் நெருங்காது. ஏனென்றால் இந்த செடி அவ்வளவு வாசம் நிறைந்தது.
 
இந்த வாசம் தீய சக்திகள் நெருங்காமல் பாதுகாக்கிறது. மேலும் ஒருசில பூச்சி வகைகள் கூட உங்கள் வீட்டின் அருகில் நெருங்காது. அப்படிப்பட்ட இந்த மருதாணி  செடியில் வரும் விதைகளை பறித்து தூபம் காட்டும் போது உங்கள் வீட்டில் எந்த ஒரு பில்லிசூனியம் போன்ற கெட்ட சக்திகளும் நெருங்காமல் இருக்கும்.
 
தினம்தோறும் வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் போது இந்த விதையும் சேர்த்து தூபம் போடலாம். அல்லது வெள்ளிக்கிழமை தோறும் சாம்பிராணி தூபம் போட்டு, அந்த நெருப்பில் சாம்பிராணி பொடியுடன் சிறிதளவு மருதாணி விதைகளையும் சேர்த்து தூபம் போட்டால், உங்கள் வீட்டில் இருக்கும் எந்த கெட்ட சக்தியாக இருந்தாலும் அது நீங்கி விடும்.
 
ஏனென்றால் தாந்திரீக வித்தைகளில் கூட இந்த மருதாணி விதைகளை அதிக அளவில் பயன்படுத்தி இருக்கின்றனர். மேலும் வாடகை வீட்டில் இருக்கும் சிலருக்கு,  அந்த வீட்டில் வாஸ்து பிரச்னையாக இருக்கும்.

சிலருக்கு சொந்த வீட்டில் இந்த பிரச்சனை இருக்கும். இதனை போக்க ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால் அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.