சாளக்கிராமம் வைத்து பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!
சாளக்கிராமம் பூஜிக்கப்படும் இடத்தில் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வதாகவும், அங்கே சகல செல்வங்களும் விருத்தியாவதாகவும் ஐதீகம்.
சாளக்கிராம பூஜை செய்வது எளிதானது. குளித்து முடித்து, தூய ஆடை அணிந்து பக்தியுடன் மரப்பெட்டியில் வைக்கப்பட்ட சாளக்கிராமத்தை எடுத்து, சிறிய அளவில் அபிஷேகம் செய்து, ஊதுபத்தி காட்டி, இனிப்பை நைவேத்தியமாக படைத்து, நமக்கு தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வழிபடலாம்.
வெளியூர் செல்ல வேண்டிய சமயங்களில் பச்சரிசியை ஒரு தட்டில் கொட்டி, அதன்மீது சாளக்கிராமத்தை வைத்து விட்டு செல்வது வழக்கம்.
சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டால் வைகுண்ட பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக விக்கிரகங்கள் சேதம் அடைந்து விட்டால், அதை நீர் நிலைகளில் சேர்த்து விடுவார்கள். அதற்கு பதிலாக வேறு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுவது நியதி. ஆனால், சாளக் கிராம கற்கள் பின்னப்பட்டிருந்தாலோ, அல்லது விரிசல்கள் இருந்தாலோ அதை செப்பு, வெள்ளி கம்பிகள் வைத்து கட்டி, பூஜைக்கு பயன்படுத்தலாம்.
அபிஷேகமும், ஆராதனைகளும் செய்யலாம். வீட்டில் ஆண்களும், பெண்களும் தினமும் சாளக்கிராமத்தை பூஜிக்க வேண்டும்.
மகாவிஷ்ணு தங்கமயமான ஒளிஉடன் திகழும் வஜ்ர கிரீடம் என்னும் பூச்சியின் வடிவம்கொண்டு சாளக்கிராம கல்லை குடைந்து அதன் மையதயை அடைந்து அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும் தனது அவதரரூபங்களையும் பலவிதமகா விளையாட்டாக வரைகிறார் இவைதான் சாளகிராமமூர்த்திகள். எதுவும் வரையபடாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும் அதற்கு ஹிரண்ய கற்ப கற்கள் என்று பெயர் இவையும் பூஜைக்கு உகந்தது. இந்த சாளகிராமம் சங்கு, நத்தைகூடு, பளிங்குபோன்று பலவித வடிவங்களில், கிடைக்கிறன.