1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஹோமத்தில் போடப்படும் பொருட்கள் தரும் பலன்கள்...!

தெய்வங்களை திருப்தி செய்வதற்காக நடைபெறும் ஹோமங்கள் மிகுந்த பலனை அளிக்கக் கூடியவை. இது போன்ற வேள்வியல் பலவித சமித்துக்களை வேள்விக் குண்டத்தில் சுடர் விட்டு எரியும் அக்னியில் ஆகுதியாகப் போடுவதைப் பார்த்திருப்பீர்கள். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவித பலன்கள் உண்டு.  அவை என்னென்ன பலனைத் தரும் என்பதை தெரிந்து கொள்ளவோம்.
வெள்ளெருக்கு: இது நவக்கிரகங்களில் ஒன்றான சூரியனுக்குரிய சமித்தாகும். இது மூலிகை வகையைச் சேர்ந்தது. இந்த சமித்துக்களால் ராஜவசியம், பெண் வசியம் மற்றும் எட்டு வகையான சித்துக்கள் அடையலாம். அத்துடன் செயல் வெற்றி அடையவும் வெள்ளொருக்கை. வேள்வித் தீயில் இடுவார்கள்.
 
செம்மர சமித்து: நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்துக்குரியது. இது ரணநோய்களைத் தீர்க்கும். 
 
நாயுருவி: நவகோள்களில் ஒன்றான புதன் கிரகத்துக்குரியது. இது இத்த சமித்து சுதர்சன வேள்விக்கு மிகச் சிறந்ததாக பயன்படும். இதன் மூலம் லட்சுமி  கடாட்சம் பெறலாம்.
 
அரசங்குச்சி: ஒன்பது கோள்விகளில் ஒன்றாகத் திகழும் குருவுக்குரிய சமித்து இது பலாஸீ கிடைக்காதபோது இதனைப் பயன்படுத்துவதுண்டு. யுத்தத்தில் வெற்றி, அரச பதவி தலைமைப் பதவி ஆகிய பலன்கள் இதனால் கிட்டும்.
 
அத்தி : நவக்கிரகங்களில் சுக்கிரனை பீரீதி செய்யக்கூடியது அத்தி சமித்து. பில்லி சூன்ய, பிசாசு தொல்லைகளிலிருந்து விடுபட, விரோதிகளை நாசம் செய்ய, மேக நோய்களிலிருந்து குணமாக, வாக்கு சித்தியாக, கால்நடை நோய்களை போக்க அத்தி பயன்படும்.
 
வன்னி: கிரகங்களிலேயே ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சாரம் செய்யும் சமித்தை ஆகுதியில் இடுவதன் மூலம் சகல தோஷ நிவர்த்தி உண்டாகும். வீட்டில்  பாம்பு புற்று, எறும்பு புற்று ஏற்படாது. பூகம்பம் போன்றவைகளால் ஏற்படும் பயம் நீங்கும். வன்னி சமித்தில் அக்னி பகவான் இருப்பதாக புராணவரலாறு  கூறுகிறது.
 
அருகம்புல்: இது நவ கோள்களில் ஒன்றான ராகுகிரக சமித்தாகும். பூர்வ கர்ம வினைகள் இச்சமித்து பயன்படும். கணபதி வேள்வியிலும் இது இடம் பெறும். 
 
தர்ப்பை: நவக்கிரகங்களில் ஞானதாரகரகனான கேது கிரகத்துக்குரியது. இந்த சமித்து ஞானவிருத்தியைத் தரும்.
 
வில்வம்: சிவனைக்குறித்த வேள்விகளிலும், சக்தி சம்பந்தமான வேள்விகளிலும், வில்வ சமித்தைப் பயன்படுத்தினால் அதிகமான பலன்கள் கிடைக்கும். சக்தியும்  செல்வமும் பெற இந்த சமித்து உதவுவதுடன், அரச சம்பத்தும் அளிக்கும்.