வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வெற்றிலைக்காம்பு தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் !!

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் வாசம் செய்வதாக மற்றொரு கூற்றும் உள்ளது. 

முதலில் சேதாரம் இல்லாத ஆறு வெற்றிலைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். முக்கியமாக இந்த 6 வெற்றிலைகளிலும் நுனிப்பகுதி இருக்க வேண்டும். நுனிப்பகுதி இல்லாத வெற்றிலையை பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. முதலில் கையில் வைத்திருக்கும் 6 வெற்றிலைகளிலிருந்து காம்புகளை மெதுவாக கிழித்து எடுத்து விடவேண்டும்.
 
காம்பு இல்லாத 6 வெற்றிலைகளை ஒரு பலகையின் மீதோ அல்லது ஒரு டேபிளின் மீதோ வைத்துக் கொள்ளுங்கள். காம்பு நீக்கப்பட்ட 6 (ஆறு)  வெற்றிலைகளையும் மயில் தோகை போல் விரித்து, வைத்து விடவேண்டும். அதன்மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு, வைத்துக்கொள்ளுங்கள்.
 
அடுத்ததாக வெற்றிலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட 6(ஆறு) காம்புகளையும் விளக்கில் உள்ள நல்லெண்ணெய்க்குள் போட்டு விடவும். பின்பு தீபத்தை ஏற்றி விட வேண்டும். 
 
ஏற்றிய தீபத்தில் எண்ணெய் சூடாகி வெற்றிலை காம்பில் இருந்து லேசான நறுமணம் வீசும். தீபத்திற்கு அடியில் இருக்கும் காம்பு இல்லாத வெற்றிலைகளிலிருந்தும் விளக்கின் உஷ்ணத்தால் நல்ல நறுமணம் வீசும்.
 
இந்த நறுமணத்தை நன்றாக சுவாசம் செய்து தீபத்தை நோக்கியவாறு ஐந்து நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து தியானம்  செய்தாலே போதும். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அது விரைவாக தீர்ந்துவிடும்.