வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 2 மே 2022 (17:22 IST)

கிருத்திகையில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

Lord Murugan 1
கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது நன்மை தரும். கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும்.


சித்திரை மாதத்தில் வருகின்ற கிருத்திகை தினத்தில் விரதம் மேற்கொள்வதால் நவகிரகங்களில் சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கி அவரின் முழுமையான அருளும் கிடைக்கப் பெறுகிறது.

முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.

வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செந்நிற மலர்களை சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

இப்படியான முறைகளில் முருகனை சித்திரை மாத கிருத்திகை தினத்தில் வழிபட்டு வசதியற்ற ஏழை மக்களுக்கு தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் ஏற்படுகின்ற சூரிய கிரக தோஷங்கள் நீங்கும்.

எதிரிகளின் தொல்லை, கொடிய நோய்கள், காரியங்களில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும். பூமி லாபம் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும்.