1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சாம்பிராணியின் வகைகளும் அதனை தூபம் போடுவதால் உண்டாகும் பலன்கள்...!!

சாம்பிராணி போடுவது என்பது வெறும் வாசனைக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது. சாம்பிராணி போடுவது வீட்டில் ஹோமம் செய்வதற்கு நிகரான ஒன்றாகும்.


ஹோமம் செய்வதால் ஏற்படும் அனைத்து நன்மைகளும் சாம்பிராணி போடுவதின் மூலம் கிடைத்து விடும். சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.
 
சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.
 
சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும்.
 
சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
 
சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.
 
சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.
 
சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
 
சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.
 
சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.
 
சாம்பிராணியில் ஜவ்வாதி போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.
 
சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.
 
சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவார்கள்.
 
சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.
 
சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.
 
சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்.
 
சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.