1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (08:57 IST)

ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மிதுனம்!

Monthly astro
கிரகநிலை:
ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன்  - சுக ஸ்தானத்தில் கேது - பாக்கிய     ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
16-08-2024 அன்று சூரியன்  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-08-2024 அன்று சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-08-2024 அன்று செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

31-08-2024 அன்று புதன் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
மிதுன ராசியினரே நீங்கள் விடா முயற்சியுடைவர். இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. சந்திரன் சஞ்சாரம் பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமான நிலை யில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையி லும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும்.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல் படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.

திருவாதிரை:
இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். ராகு சஞ்சாரத்தால் வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், ராசிநாதன் பலத்தால் பாதிப்பை உண்டாக்காமல் காப்பாற்றி வருவார். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும்.

புனர்பூசம்:
இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

பரிகாரம்:  புதன் கிழமையில் நவகிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12