புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

வீட்டில் மாவிலை தோரணம் கட்டுவதால் தீய சக்திகள் நீங்குமா...?

விழாக்களின் சிறப்பே அதன் அலங்காரங்கள் எனலாம். விழாக்களின்போது அலங்காரத்துக்காகப் பயன்படுத்தும் பொருள்களுள் ஒன்று மாவிலை.
கோவில்களில் திருவிழா நடைபெறூம் காலங்களில் பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடும். அவர்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது.  எனவேதான் விழா காலங்களில் மாவிலை தோரணம் கட்டுகிறார்கள்.
 
கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது. காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன. நோய்க் கிருமிகளிலிருந்தும் பாக்டிரியாக்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் தோரணங்கள்  கட்டப்படுகின்றன.
 
விசேஷ நாட்களில் வீட்டில் மாவிலை தோரணம் கட்டுவதால் தீய சக்திகள் விலகுகிறது. அதோடு மாவிலை தோரணம் உள்ள வீட்டை பார்க்கும் தேவர்கள், அந்த வீட்டிற்குள் நுழைய முடிவு செய்வார்கள். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அதிஷ்டம் பிறக்கும் அதோடு  வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அவற்றை இந்த தோரணம் நீங்க செய்யும்.
 
மாவிலைத் தோரணம் சுற்றுச் சூழலைத் தூய்மையாக்கும் கிருமி நாசினி என்று அறிந்திருந்தனர், நம் முன்னோர்கள். தினந்தோறும்  இல்லங்களில் மாவிலைத் தோரணம் கட்டினால், இல்லத்திலுள்ளவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கலாம். வீட்டிலுள்ள நுழைவு வாயிலும் மங்களகரமாகத் தோன்றும்.