வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மணி பிளான்ட் வளர்ப்பதால் பணம் பிரச்சனை தீருமா....?

மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும். வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
தென்கிழக்கு திசையில் தான் அதிகம் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கிறது என்பதால், இந்த திசையில் தான் மணி பிளான்ட் நன்கு வளரும் மற்றும் இதனால் செல்வம் பெருகும் யோகம் பெற முடியும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
தென்கிழக்கு திசை விநாயகருக்கு உகந்த திசையாகும். மற்றும் இது சுக்கிரனை பிரதிநிதித்துவம் செய்யும் திசை எனக் கூறப்படுகிறது. இதன்  காரணங்களுக்காக தான் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க சொல்லி கூறுகிறார்கள்.
 
எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட்டை வடகிழக்கு திசையில் வைக்க கூடாது. ஏனெனில் இது எதிர்வினையை அதிகரிக்கும் திசை என  கூறுகிறார்கள்.
 
வடகிழக்கு குருவின் திசையை பிரதிநிதித்துவம் செய்கிறது. சுக்ரனும், குருவும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இந்த திசையில் வைத்தால் நஷ்டம் ஏற்படும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
துளசி செடியை வடகிழக்கு திசையில் வைப்பது தான் சரியானது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். செல்வம் பெருகும் மணி பிளான்ட் மணி பிளான்ட்டை மண்ணிலும் வளர்க்கலாம், நீரிலும் வளர்க்கலாம். அதே போல, வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அவரவர் விருப்பப்படி  எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம்.
 
இதனால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும். ஓரிரு இலைகள் வாடினால் கூட விரைவாக அந்த இலைகளை அகற்றிவிடுங்கள், இல்லையேல் இது பரவி மொத்த செடியையும் அழித்துவிடும்.