புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2024 (09:26 IST)

ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கடகம்!

Monthly astro
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றம்:
ஐப்பசி 06 (23.10.2024) அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் ராசிக்கு மாறுகிறார்.
ஐப்பசி 08 (25.10.2024) அன்று சுக ஸ்தானத்தில் இருந்து  புதன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ஐப்பசி 18 (05.11.2024) அன்று அஷ்டம ஸ்தானத்தில் சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.  
ஐப்பசி 22 (08.11.2024) அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ஐப்பசி 27 (13.11.2024) அன்று பஞசம ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.

பலன்:
இந்த மாதம் ராசிக்கு வரும் செவ்வாயால் பலவிதத்திலும் நன்மை பயக்கும். தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாக லாம். கணவன், மனைவி ஒருவருக்கொரு வர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள் வது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அரசியல்துறையினருக்கு  நீதிமன்ற வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். கலைத்துறையினர் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.

புனர்பூசம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம்  தொடர்பான காரியங்களில் மெத்தனபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.

பூசம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.

ஆயில்யம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனகசப்பு மாறும்.

பரிகாரம்: தினமும் அஷ்ட லட்சுமியை வணங்கி வாருங்கள். தாமரை மலர் கொண்டு பூஜியுங்கள்.

அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள் : நவ 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 20, 21