திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth.K
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (16:21 IST)

ஆவணி மாத ராசிபலன்கள் 2023! – கடகம்!

Aavani
கிரகநிலை:


தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), சூர்யன், சந்திரன், புதன்(வ) - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு, ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்:
18-08-2023 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

19-08-2023 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

24-08-2023 அன்று சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
தயாளகுணம் படைத்த கடக ராசியினரே நீங்கள் இனிமையாக பேசி மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். குடும்பத்தின் மீது அதிக பாசம் இருப்பவர்கள். இந்த மாதம் ராசிக்கு செவ்வாய் பகவான் வருகை தருகிறார். சுபச்செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து செய்வது நல்லது. மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத் தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர் களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி செயல்படுவது நன்மை தரும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள்.

பெண்களுக்கு நண்பர்களிடம் உறவினர் களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது.  

கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும்.

மாணவர்களுக்கு பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

புனர்பூசம் - 4:
இந்த மாதம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.

பூசம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

ஆயில்யம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்;
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 31; செப் 1
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 24, 25