1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (15:32 IST)

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - கன்னி

கன்னி - (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) அமைதியும், கருணையும் கொண்ட கன்னிராசியினரே நீங்கள்  அனைவரிடமும் நேசமுடன் பழகுவீர்கள். இந்த குருப் பெயர்ச்சியில் சுபச் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப் பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்பு  களை சமாளிக்க வேண்டி இருக்கும். 
 
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி  இருக்கும்.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது  நல்லது. அவர்களின் நலனுக் காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடை வெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்க  ளுக்காக செலவு செய்யவும் நேரிடும்.
 
பெண்களுக்கு: எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும்.
 
மாணவர்களுக்கு:  கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும். 
 
பரிகாரம்: லக்ஷ்மி நரசிம்மரை தரிசித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில்  திருமணம் கூடும்.
 
- பெருங்குளம் ராமகிருஷ்ணன்