12 ராசிக்களுக்கும் பொருத்தமான அதிர்ஷ்ட கல் எவை தெரியுமா...!

ஒவ்வொரு ராசிக்கும் பொருத்தமான ராசிக்கல்லைத் தான் அணியவேண்டும். அப்போதுதான் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். எந்த ராசிக்காரர்கள் எந்த  ராசிக்கல் அணியவேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் அணியவேண்டிய ராசிக்கல் பவளம். இதை அணிந்தால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். பதவி உயர்வு கிடைக்கும்.
 
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் அணியவேண்டியது வைரம். இதனால் நல்ல அதிர்ஷ்டத்தையும் உருவாக்கும். வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை  கொடுக்கக் கூடியது.
 
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். மேலும் புதன் திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியைக் கொடுக்கும்.  அதிர்ஷ்டம் தரும்.
 
கடகம்: கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது.
 
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இது மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்வில் உயர்வைத் தரும். நினைவாற்றலை  அதிகப்படுத்தும். தொழிலில் லாபம் கிட்டும்.
 
கன்னி: கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். பேச்சாற்றலை வளர்க்கும். உடல் வளர்ச்சி பெரும். மரகதக் கல்லை உற்று நோக்கினாலே  புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.
 
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இது மகிழ்ச்சியையும், யோகத்தையும் தரக்கூடியது. நல்ல வசீகரத்தைத் தரும்.
 
விருச்சிகம்: விருட்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிட்டும். கோபம் குறையும்.
 
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். குரு திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும், நல்ல செல்வத்தைக் கொடுக்கும்.
 
மகரம்: மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். தெய்வீக சிந்தனையைத் தரும். நல்ல செல்வ வளத்தைக் கொடுக்கும்.
 
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். இதை அணிவதால் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும்.
 
மீனம்: மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். வியாழன் திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம்.


இதில் மேலும் படிக்கவும் :