பரசுராமர் பிறந்த தலம்
|
ஜலாலாபாத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்த திருத்தலம். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த இடம் கேடா பரசுராமபுரி என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த இடத்தில்தான் பரசுராமர் பிறந்ததாக மக்கள் நம்புகின்றனர். இந்த இடத்தை முக்கிய சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இது பற்றி அம்மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜிதின் பிரசாத் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார்.
|
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த கோயிலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கி சிறப்பாக நடந்து முடிந்துள்ளன.
இந்த தலத்தின் வரலாறை புரட்டிப் பார்க்கும்போது, ஜலாலுதினின் இளைய மகன் ஹபிஸ் கானிற்கு திருமணம் நிச்சயம் செய்த போது, அவருக்கு மனைவியாக வரும் மருமகளுக்கு இந்த கோயில் இருக்கும் இடம் ஜலாலுதினால் வழங்கப்பட்டுள்ளது. அப்போது இந்த கோயில் பரசுராம்புரியில் இருந்து ஜலாலாபாத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
|
இந்த கோயில் சுமார் 20 அடி உயரத்துடன் காணப்படும் இந்த கோயில் இஸ்லாமியர்களால் பல முறை இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் பக்தர்களால் அதே இடத்தில் மீண்டும் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை கோயில் அமைக்கும் பொழுதும் பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு முறை 8 அடி உயரமுள்ள ஒரு பசுவின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த சிலை தற்போதுள்ள கோயிலின் நுழைவாயிலில் வலது புறத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் மேற்கு புறத்தில் தாட்சாயினி, தாட்சாயின் ஆகியோரது சன்னதிகள் உள்ளன. கோயிலை ஒட்டி ஜிக்தினி ஏரியும் உள்ளது. கோயிலின் முன் புறத்தில் ராம்தால் என்ற அழகிய குளமும் அமைந்துள்ளது.
|
வெகு தொலைவில் இருந்தெல்லாம் இந்த கோயிலைக் காண பக்தர்கள் வருகின்றனர்.
மொட்டை அடித்தல், அன்னதானம், காது குத்துதல் போன்றவற்றை பக்தர்கள் இங்கு செய்கின்றனர்.
தற்போது மஹந்த் சத்யதேவ் பாண்டியா என்பவரது கண்காணிப்பின் கீழ் இக்கோயிலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. நவதுர்கா சிலை அமைக்கப்பட்டுள்ளது.
நவதுர்காவின் 24 விதமான உருவங்களைக் கொண்ட சிலைகள் கோயிலின் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
அங்கு வாழும் மக்களால் அதிகமாக நம்பப்படும் இந்த கோயிலில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகின்றன.
