1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2016 (07:54 IST)

சசிகலா புஷ்பாவும், திருச்சி சிவாவும் உடற்பயிற்சி செய்தார்கள்: நாஞ்சில் சம்பத் கிண்டல்

தற்போது அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் செய்தி சசிகலா புஷ்பா, திருச்சி சிவா விவாகரம் தான். இது குறித்து பேசிய அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்களை கிண்டலடித்து பேசியுள்ளார்.


 
 
மதுரையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நாஞ்சில் சம்பத், சசிகலா புஷ்பா, திமுகவினருடன் சேர்ந்து திட்டமிட்டு கழகத்தை காட்டிக் கொடுத்துள்ளார். அவரால் கழகத்தை ஒன்றும் செய்ய முடியாது. சசிகலா புஷ்பாவுக்கு பல பதவிகள் கொடுத்து அழகு பார்த்த அம்மாவை குறை சொல்ல அவருக்கு தகுதி இல்லை என்றார்.
 
தொடர்ந்து பேசிய அவர், சில நாட்களுக்கு முன்பு, வாட்ஸ் அப்பில் ஒரு படம் பார்த்தேன். அதில் திருச்சி சிவாவும், சசிகலா புஷ்பாவும் உடற்பயிற்சி செய்யும் படங்கள் இருந்தது. அப்போதே அவர் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்படுவார் என்று நினைத்தேன் என கிண்டலாக பேசினார்.