செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. ரியோ ஒலிம்பிக்ஸ் 2016
Written By Dinesh
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (01:40 IST)

இந்திய வீராங்கானையின் பிறந்தநாள் கொண்டாட தடை

இந்திய வீராங்கானையின் பிறந்தநாள் கொண்டாட தடை

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ள தீபா கர்மாகருக்கு நேற்று 23வது பிறந்த நாள்.


 


அவரது பெற்றோரை தவிர வேறு யாரிடமும் தீபா கர்மாகர் வாழ்த்து பெறவில்லை. 14ம் தேதி இரவு நடக்கவுள்ள பைனலில், கவனம் சிதற கூடாது என்பதால், ஒலிம்பிக் கிராமத்தில், பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தியால், தீபா கர்மாகரை ஹவுஸ் அரஸ்ட் செய்துள்ளார். இது குறித்து பிஸ்வேஸ்வர் நந்தி கூறுகையில்,

”தீபா கர்மாகரின் செல்போனில் இருந்து, சிம் கார்டுகளை எடுத்து விட்டேன். தீபா கர்மாகருடன் பேச, பெற்றோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதுவும் சிறிய இடைவெளியில்தான். தீபா கர்மாகருக்கு கவன சிதறல் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. ஜிம்னாஸ்டிக்கில் ஒவ்வொரு போட்டியும் கடினமானதுதான். எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும். தீபா கர்மாகர் பதக்கம் வென்றால், அது நாட்டிற்கு அளிக்கப்படும் மிகப்பெரிய சுதந்திர தின பரிசாக இருக்கும். அதற்கு பின்னர்தான் அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும்” என்றார்.