ஒலிம்பிக் போட்டி: 19 தங்கப் பதக்கம் கைப்பற்றி அமெரிக்க நீச்சல் வீரர் வரலாற்று சாதனை
ஒலிம்பிக் போட்டி: 19 தங்கப் பதக்கம் கைப்பற்றி அமெரிக்க நீச்சல் வீரர் வரலாற்று சாதனை
ரியோவில் நேற்று 4x100 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் நீச்சலில் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தங்கம் வென்றார். இதன்மூலம் 19வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி மைக்கேல் பெல்ப்ஸ் வரலாறு படைத்துள்ளார்.
கடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி வரை மைகேல் பெல்ப்ஸ் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் வென்றிருந்தார். மேலும் லண்டன் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாக பெல்ப்ஸ் அறிவித்தார். இதனிடையே பெல்ப்ஸ் இல்லாததால் கடந்த 2013ம் ஆண்டு பிரான்சில் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க அணி தொடர் நீச்சலில் பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்து.
இதனால் பெல்ப்ஸ் ஒய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றுவிட்டு மீண்டும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். நீச்சல் போட்டிகளை பொறுத்தவரை எப்போதுமே அமெரிக்காவுக்கும் பிரான்சுக்குமிடையே கடும்போட்டி இருக்கும். ரியோ ஒலிம்பிக்கிலும் இந்த இரு நாடுகளுக்குமிடையேதான் கடும் போட்டி நிலவியது.
இருப்பினும் அமெரிக்கக் குழு 3 : 9.92 விநாடிகளில் தூரத்தை கடந்து தங்கத்தை தட்டி சென்றது. இதில் பெல்ப்சின் ஸ்பிலிட் டைம் 47.12 விநாடிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்