செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2016-கண்ணோட்டம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2016 (14:03 IST)

2016 தமிழ் சினிமா - நடிகை அசின்-ராகுல் சர்மா திருமணம்

நடிகை அசின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்திய நடிகையும், பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ஆவார். 2001 ஆம்  ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

 
நடிகை அசின்-ராகுல் சர்மா திருமணம் ஜனவரி 18 -ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. நடிகை அசின் நடித்த முதல் தமிழ்  படம், ஜெயம் ரவியுடன் இணைந்து எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் தான்.
 
தமிழில் சூர்யா, விஜய், அஜித் போன்ற உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து, தமிழ் நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தைப்  பிடித்தார். நடிகை அசினுக்கு மைக்ரோ மேக்ஸ் நிறுவனரான ராகுல் சர்மாவுக்கும் இடையே முதலில் நட்பு ஏற்பட்டு, பின்பு, அது  காதலாக மலர்ந்தது. இந்த காதலுக்கு இருவீட்டார்கள் பச்சைக் கொடி காட்டினார்கள்.

 
இந்நிலையில், டெல்லியில் உள்ள நட்சத்திர தனியார் விடுதியில் அசின்-ராகுல் சர்மா திருமணம் நடந்தது. இதனையடுத்து,  காலையில் கிறிஸ்தவ முறைப்படியும், மாலையில் இந்து முறைப்படியும் இரு முறை திருமணம் செய்தனர். சுமார் 50 பேர்  மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
 
இந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்ட சில திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.  திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.
 
ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவரான பி.சி.ஸ்ரீராம்
 
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, சென்னையில், ஜனவரி 10 ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்  தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஒளிப்பதிவாளர் சங்கத் தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் போட்டியிட்டார்.


 
இந்த தேர்தலில் தற்போது பதவியில் உள்ளவரான ஜி.சிவா தலைமையில் சேவை அணி, பி.சி.ஸ்ரீராம் தலைமையில்  நடுநிலைஅணி, கே.வி.கன்னியப்பன் தலைமையில் ஆண்டவர்அணி என்று 3 அணிகள் போட்டியிட்டன.
 
ஒளிப்பதிவாளர் சங்கத் தேர்தவாக்குப்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. மொத்தம் உள்ள  912 வாக்குகளில் 704 வாக்குகள் பதிவானது. வாக்குகள் மாலை 6 மணிக்கு எண்ணப்பட்டன.

 
சென்னை வடபழனியில் நடைபெற்ற ஔிப்பதிவாளர் சஙக தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பி.சி.ஸ்ரீராம் 555  வாக்குகளும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ராம்நாத் ஷெட்டி 445 வாக்குகளும், செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட  கண்ணன் 443 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். திரையுலகின் பல்வேறு பிரிவினரும் அவருக்கு வாழ்த்துக்களை  தெரிவித்தனர்.
 
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராக பி.சி.ஸ்ரீராம் தேர்வு செய்யப்பட்டார்.  மேலும் பி.சி.ஸ்ரீராம்  தலைமையில் போட்டியிட்ட பெரும்பாலான நிர்வாகிகளே வெற்றி பெற்றனர். சிகா என அழைக்கப்படும் தென்னிந்திய  ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கான தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான நடுநிலை அணி வெற்றி பெற்றுள்ளது. ஒளிப்பதிவாளர்  சங்கத்தில் 1,200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஆந்திராவில் 120 பேர், கர்நாடகாவில் 60 பேர், கேரளாவில் 40 பேர் உள்ளனர்.