புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்

அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும். அமைதியையும் ஆசியையும் கொண்டுவராத அன்புச்செயல்கள் உலகத்தில் எதுவுமே இல்லை.
* கடவுள் பற்றில்லாமல் இருக்கிறார். ஏனென்றால் உலகம், உயிர்கள், அண்டசராசரங்கள் அனைத்திடமும் அவர் அன்பு செலுத்துகிறார்.
 
* இயற்கையை வெல்வதற்கே மனிதன் பிறந்திருக்கிறான். அதற்குப் பணிந்து போவதற்காக அல்ல.
 
* இங்கேயே, இப்போதே நிறைநிலையை அடைய முடியாதென்றால் வேறெந்த மறுவாழ்க்கையிலும் அடைவோம் என்பதற்கு எந்த  உத்தரவாதமும் இல்லை.
 
* பாவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை. நம்மிடம் உள்ளதெல்லாம் அறியாமை மட்டுமே. கடவுளை உணர்வதால் அறியாமை விலகுகிறது.
 
* முதலில் நீ செல்ல வேண்டிய பாதையைக் கண்டுபிடி. அதன் பிறகு செய்யவேண்டியது எதுவும் இல்லை. கைகளைக் குவித்தபடியே கடவுளைச் சரணடைந்துவிடு. பாதையின் போக்கிலேயே லட்சியத்தை அடைந்து விடுவாய்.
 
* ஓய்வு ஒழிவில்லாமல் வேலை செய்து கொண்டே இரு. ஆனால், செய்யும் வேலையில் நீ கட்டுப்பட்டு விடாதே. அதற்குள் சிக்கிக்  கொள்ளாதே. இதுதான் கீதையின் வழி.
 
* எழுந்திருங்கள், எழுந்திருங்கள். நீண்ட இரவு கழிந்துவிட்டது. பகல்பொழுது நெருங்கிக் கொண்டிருக்கிறது. என் அன்பான இளைஞர்களே! உங்களுக்கு வேண்டுவதெல்லாம் உற்சாகம்... உற்சாகம் மட்டுமே.
 
* சுயநலம் அற்றவர்களாக இருங்கள். ஒருவர் இல்லாதிருக்கும் போது அவரைப் பற்றி, பிறர் தூற்றுவதை ஒருபோதும்  கேட்டுக்கொண்டிருக்காதீர்கள்.
 
* மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைப்பது கூட சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமக்கு தந்துவிடும்.