புதன், 13 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்

உங்களிடமே நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். ஒருகாலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள். 
இப்போது நீங்கள் வேறுவித வடிவம் தாங்கி வந்திருக்கிறீர்கள்.
 
* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும் போது உள்ளம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். அறிவால் அடையமுடியாத உயர்ந்த இடத்திற்கு நல்லமனநிலை ஒருவனை அழைத்துச் செல்லும்.
 
* மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது.
 
* ஒரு எஜமானைப் போல உங்கள் செயல்களைச் செய்யுங்கள். அடிமையைப் போல உங்கள் செயல்பாடுகள் அமையக்கூடாது. முழுமையான சுதந்திர உணர்வும், அன்பும் கொண்டு உங்கள் கடமைகளில் பணியாற்றுங்கள்.
 
* கர்மயோகம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒருவருக்கு அவர் யார், எப்படிப்பட்டவர் என்ற சிந்தனையோ கேள்வியோ இல்லாமல் கூட அவருக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது தான்.
 
* சிங்கங்களே! எழுந்து வாருங்கள். வீணான மயக்கங்களை உதறித்தள்ளுங்கள். நீங்கள் சுதந்திரமானவர்கள். அழியாத பேரின்பத்தின்  பங்குதாரர்கள்.
 
* உங்களிடம் நேர்மை இருக்கிறதா? பொதுநலத்துடன் சேவை செய்கிறீர்களா? அன்பு இருக்கிறதா? இம்மூன்றும் இருந்தால் பயமே வாழ்வில்  தேவையில்லை. மரணம் கூட உங்களை நெருங்க முடியாது.
 
* இறைநம்பிக்கையோடு செயல்படுங்கள். அவரையே எப்போதும் சார்ந்திருங்கள். உங்களை எந்தச் சக்தியும் எதிர்த்து நிற்க முடியாது.
 
* வலிமையின்மையே துன்பத்திற்கான ஒரே காரணம். பொய்யும், திருட்டும், கொலையும், மற்ற அனைத்து பாவச் செயல்களும்  மனபலவீனத்தாலே தோன்றுகின்றன.
 
* உலகவாழ்வுக்குள் வந்துவிட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதேனும் அடையாளத்தினை விட்டுச் செல்லுங்கள். எழுந்திருங்கள், உழையுங்கள். இல்லாவிட்டால் நாம் பூமியில் பிறந்ததில் ஒருபயனும் இல்லை.