1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

வள்ளலார் கடவுள் குறித்து கூறிய கருத்துக்கள்...!

வள்ளலார் போதித்த சுத்த சன்மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படை அம்சம் எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு காட்டுதல். எல்லாமே இறவன் படைப்பு என்பதால் இறைவனின் குறிப்பிட்ட சில படைப்புகளை அலட்சியப்படுத்தி விட்டோ, வெறுத்து விட்டோ இறவனை யாரும் அடைய முடியாது. 
எனவே எல்லா உயிரையும் தன்னுயிராக எண்ணுவதே உண்மையான ஆன்மிகம். அதுவே அருட்பெரும்ஜோதியான இறைவனை அடையும் வழி என்பதை ஆன்மிகவாதிகளாகத் தங்களை எண்ணிக் கொள்பவர்கள் மறந்து விடக்கூடாது.
 
கடவுள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவர் அவரை சாதி, சமயம், மதம் என்ற குறுகிய வட்டங்களுக்குள் அடைத்து விட முயற்சி அறியாமையே ஒழிய  ஆன்மிகம் அல்ல. வள்ளலார் கடவுள் குறித்து கூறிய கருத்துக்கள் இவை.
 
எல்லாப் பிரிவினைகளையும் வள்ளலார் ஆன்மிகமல்ல அறிவுமல்ல என்று மறுத்தார். பிரிவினைகள் அழிக்குமே அல்லாமல் நன்மை எதையும் விளைவிக்காது  என்று அவர் கருதினார். பிரிவினைகள் இல்லாமல் எல்லா உயிரும் தன்னுயிர் போல எண்ணி இருப்பாரின் உள்ளமே இறைவன் நடம்புரியும் இடம் எனக்  கண்டறிந்ததாகச் சொல்கிறார்.