Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்!

Written By Sasikala
Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (13:25 IST)
 
* துருப்பிடித்து தேய்வதை விட, உழைத்து தேய்வது மேலானது. மன உறுதியோடு உழைத்து வாழுங்கள்.
 
* ஒருவரிடம் அன்பு இல்லாவிட்டால், அவரிடம் எவ்வளவு கல்வி ஞானம் இருந்தாலும் கடவுளை அடைய முடியாது.
 
* இறைவனுக்கு உருவமில்லாமல் இருக்கலாம். ஆனால் உருவ வழிபாடு கேலிக்குரியதல்ல.
 
* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும்  மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
 
* நீ கடலை கடக்க விரும்பினால் இரும்பைப் போன்று மன உறுதி உன்னிடம் இருந்தாக வேண்டும். மலைகளைத் துளைத்துச்  செல்வதற்கு போதுமான வலிமை உனக்கிருக்க வேண்டும்.
 
* மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்க வேண்டும் என்பது தெரிந்து கொண்டால் உலகம்  தனது ரகசியங்களை வெளியிடத்தயாராக இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்துபவனுக்கே வலிமை கிட்டும். உள்ளத்தின்  ஆற்றலுக்கு எல்லையே இல்லை.
 
- விவேகானந்தர்.
அடுத்த கட்டுரையில்
Show comments