கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
ஆருத்ரா தரிசனத்தினை தொடர்ந்து கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் 6 வது நாளாகவும் தொடரும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி.
செல்வி நித்ய ஸ்ரீ சுரேஷ் அவர்களின் நாட்டியாஞ்சலி கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பகுதியில் உள்ள நால்வர் அரங்கில் ஆருத்ரா தரிசனத்தினை முன்னிட்டு ஆறாவது நாளாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
6 வது நாளாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் மருத்துவர் சுரேஷ் – ஜெடிலா ஆகியோரின் மகள் நித்ய ஸ்ரீ சுரேஷ் (வயது 15) நாட்டியம் ஆடி நடராஜருக்கு நாட்டியாஞ்சலி செலுத்தினார். மேலும், பரதம் ஆடிய படி நடராஜருக்கு நாட்டியாஞ்சலி செலுத்திய நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். முன்னதாக இவரது குரு முனைவர் சிவலோகநாதனுக்கும் மரியாதை செலுத்தினார். இதற்கான முழு ஏற்பாடுகளை கூத்தம்பலம் நாட்டிய அகாடமியினை சார்ந்த குரு முனைவர் சிவலோகநாதன் சிறப்பாக செய்திருந்தார்.
ஏற்கனவே, இந்த கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் நவராத்திரி நிகழ்ச்சிகளில் பாட்டுக்கச்சேரி, வீணைக்கச்சேரி ஆகியவற்றில் பங்கேற்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் கண்டு ரசித்து வருகின்றனர்.