கேட்ட வரங்களை தரக்கூடிய வராஹி மந்திரம்!

சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள் வராஹி. அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள்தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி.
மனித உடலும், வராஹி (பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே அன்னைக்கு நிகரானவள். இவள்  லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இந்த தெய்வத்திற்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்போருக்கு  கேட்ட வரங்களை மிக விரைவில் தரக்கூடியவள் வராகி அம்மன்.
 
வராஹி காயத்ரி மந்திரம்:
 
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாரஹி ப்ரசோதயாத்
 
இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வலமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும், கேட்ட வரங்கள் கிடைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :