1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

உண்ணாவிரதம் என்னும் ஆயுதம்; காந்தியடிகள்

உண்ணாவிரதமெனும் ஆயுதத்தை உபயோகிப்பதற்குச் சரீரபலம் மட்டும் போதாது. சத்தியாக்கிரக கடவுளிடத்தில் அசாத்திய நம்பிக்கை தேவைப்படும்.
நான் அனுஷ்டித்த உண்ணாவிரதங்களில் எதுவும் பலன் தராமல் போனதாக எனக்கு ஞாபகமில்லை. அப்படி நான் உண்ணாவிரதம் அனுஷ்டித்த காலத்திலெல்லாம் அதிக உன்னதமான அமைதியும், அளவற்ற ஆனந்தமுமே அடைந்தேன்.
 
அதிக பலனுள்ள சில மருந்துகளைப் போல உண்ணாவிரதமும் அபூர்வமான சந்தர்ப்பங்களிலும், அதில் திறமையுடைவர்களின் மேற்பார்வையிலும் தான்  உபயோகிக்கக் கூடியதாகும்.
 
உண்ணாவிரதத்தை உபயோகிக்கும் வித்தையில் திறமை உள்ளவன் உபயோகித்தாலன்றி அது பலாத்காரமாகவே ஆகிவிடக்கூடும்.
 
ஆண்டவன் அருளால் ஏற்படாத உண்ணாவிரதங்கள் அனைத்தும் பயனற்ற வெறும் பட்டினியைவிடக் கூடக் கேவலமானதே ஆகும்.
 
உண்ணாவிரதத்தால் ஏதேனும் நன்மை ஏற்படக் கூடியதாயிருந்தாலும், அடிக்கடி நிகழ்த்தி வந்தால் எந்த நன்மையும் ஏற்படாமல் போகும். இறுதியில் ஏளனமே மிச்சமாகும்.