செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. ஆன்மிகம்
  4. »
  5. அருளுரை
Written By Webdunia

கற்றலின் அவசியம் - அன்னை!

எப்பொழுதும் மேலும் மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் நம்மிடமிருந்தால் ஒரு மலரிடமிருந்து, ஒரு விலங்கிடமிருநூது, ஒரு குழந்தையிடமிருந்தும் கூட நாம் அறிவு பெறலாம்.

நாம் கவனத்துடன் எதைச் செய்தாலும் கட்டாயமாக அதில் சுவை தோன்றிவிடும்.

ஆழ்ந்த கல்விப் பயிற்சி மனத்தை வலுப்படுத்துகின்றது. பிராணனுடைய ஆசைகளிலும் தூண்டல்களிலும் மனம் மூழ்கிவிடாமல் தடுக்கின்றது. ஆழ்ந்த படிப்பில் மனத்தை ஊன்றுவது மனத்தையும் பிராணனையும் கட்டுப்படுத்துவதற்கான சக்தி வாய்ந்த வழிகளில் ஒன்றாகும். அதனால்தான் படிப்பு மிக முக்கியமானதாகிறது.

webdunia photoFILE
எதனிடமிருந்தெல்லாம், யாரிடமிருந்தெல்லாம் கற்க முடியுமோ அவர்களிடமிருந்தெல்லாம் கற்க ஆயத்தமாயிருக்க வேண்டும். அதுவே உண்மையான அறிவுடமைக்கு அடையாளம்.

எப்பொழுதும் மேலும் மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் நம்மிடமிருந்தால் ஒரு மலரிடமிருந்து, ஒரு விலங்கிடமிருநூது, ஒரு குழந்தையிடமிருந்தும் கூட நாம் அறிவு பெறலாம். ஏனெனில், உலகில் ஒரே ஒரு குருதான் இருக்கின்றார், கடவுள்தான் அந்த குரு. அவர் எல்லாவற்றின் மூலமும் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்.

குழந்தைகள் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காகவும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையானவற்றைக் கற்றுக் கொள்வதற்காகவும் பள்ளிக்குப் போகிறார்களா - அல்லது, போலியாகச் செயல்படுவதற்கும், நிறைய மதிப்பெண்கள் வாங்கி அதைப்பற்றிய பெருமையடித்துக் கொள்வதற்கும் போகிறார்களா என்பதே கேள்வி.

கடவுளின் சந்நிதானத்தில் கடலளவு போலித் தனத்தைவிட ஒரு துளி நேர்மைக்கு (Sincerity) அதிக மதிப்புண்டு.

அன்னையே, நீர் என்னைப் படிக்கும்படி சொல்கிறீர், ஆனால் எனக்குப் படிப்பில் விருப்பம் இல்லையே?

நீ படிப்பில் போதிய அளவு சிரத்தைக் கொள்ளவில்லை, அதனால்தான் உனக்கு அதில் சுவை உண்டாகவில்லை. நாம் கவனத்துடன் எதைச் செய்தாலும் கட்டாயமாக அதில் சுவை தோன்றிவிடும்.

வாழ்வில் மன வளர்ச்சியால் என்ன பயன்?

மன வளர்ச்சியில்லாவிட்டால் மனித வாழ்வு முரண்பாடுகளை உடையதாய் ஒழுங்குபடுத்தப்படாததாய் இருக்கும். நாம் உணர்ச்சிகளால் இயக்கப்படும் விலங்குகள் போலவும் நிதானம் தவறிய பைத்தியக்காரர்கள் போலவும் ஆகிவிடுவோம்.

அறிவும் விவேகமும் மனித மனத்தின் உயர் பகுதியைச் சேர்ந்தவை. அவைகளே அவனை விலங்குகளிமிடருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.

அறிவும் விவேகமும் இல்லாதவன் மனிதனே அல்ல, மனித உருவிலுள்ள விலங்குதான்.

ஆழ்ந்த கல்விப் பயிற்சி மனத்தை வலுப்படுத்துகின்றது, பிராணனுடைய ஆசைகளிலும் தூண்டல்களிலும் மனம் மூழ்கிவிடாமல் தடுக்கின்றது. ஆழ்ந்த படிப்பில் மனத்தை ஊன்றுவது மனத்தையும் பிராணனையும் கட்டுப்படுத்துவதற்கான சக்தி வாய்ந்த வழிகளில் ஒன்றாகும். அதனால்தான் படிப்பு மிக முக்கியமானதாகிறது.

முறையாகவும் ஒழுங்காகவும் படிப்பதில் உன் மூளையை ஈடுபடுத்து. அப்பொழுது நன்றாக வேலை செய்திருப்பதால், படிக்காத வேலைகளில் அது அமைதியாக இருக்கும். அப்பொழுது உன்னால் உனது இதயத்தின் ஆழத்தில் ஒருமுனைப்படவும் அங்கு அந்தராத்மாவைக் காணவும் முடியும். அதன்மூலம் உண்மையான மகிழ்ச்சியைப் பெறுவாய்.