வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Sasikala
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2016 (12:44 IST)

திருவேங்கடமுடையான் கோயிலில் பிரம்மோற்சவ வைரமுடி கருடசேவை!

திருவேங்கடமுடையான் கோயிலில் பிரம்மோற்சவ வைரமுடி கருடசேவை!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா மேல்காவனூரில் உள்ள திருவேங்கடமுடையான் கோயிலில் வரும் 30ம் தேதி முதல் 2ம் தேதி வரை பிரம்மோற்சவ வைரமுடி கருடசேவை விழா நடைபெறுகிறது.



 
திருமலை திருப்பதி தேவஸ்தான தர்மகர்த்தா ஸ்ரீபரமஹம்ச ஸ்ரீஸ்ரீஸ்ரீசடகோப இராமானுஜ பெரிய ஜீயர், திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீஸ்ரீஸ்ரீ கோவிந்த ராமானுஜ சின்ன ஜீயர், திருக்கோயிலூர் ஸ்ரீபமரஹம்ச ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீனிவாச ராமானுஜஸ்ரீஎம்பெருமானார் ஜீயர் ஆகியோர் தலைமையில் இந்த பிரம்மோற்சவ வைரமுடி கருடசேவை விழா நடைபெறுகிறது.
 
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேல்காவனூர் கிராமத்துக்கு வழங்கிய பஞ்சலோக விக்ரகங்கள் கரிக்கோலம், நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வரும் 30ம் தேதி காலை 7 மணிக்கு கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
 
மேலும் சன்னதிக்கு வழங்கிய பஞ்சலோக சிலைகள் கரிக்கோலம் நடைபெறும். மாலை 5 மணிக்கு திருக்கோயிலூர் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீனிவாச ராமானுஜ ஸ்ரீஎம்பெருமானார் ஜீயர் மங்களாசாசனம் ஹோமம், திருமஞ்சனம், திருவாராதம் அலங்காரம் ஏகாந்த சேவை நடைபெறும். 1ம் தேதி காலை 5 மணிக்கு சுப்ரபாதம், திருமஞ்சனம், காலை 9 மணிக்கு தங்க கவசம் அலங்காரம், சோட உபசார ஆரத்தியும், காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி ஸ்ரீபரமஹம்ச ஸ்ரீஸ்ரீஸ்ரீகோவிந்த ராமானுஜ சின்ன ஜீயர் ஸ்வாமிகள் மங்களாசாசனம் நடைபெறும். பகல் 2 மணிக்கு உரியடி உற்சவம் மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8 மணிக்கு மின் அலங்காரத்துடன் பூப்பல்லக்கு திருவீதியுலா நடைபெறும். 2ம் தேதி காலை 10 மணிக்கு தெய்வ திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை மேல்காவனூர் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.